• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

தூய்மைப் பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு, ஆனால் கோரிக்கைக்கு எதிர்ப்பு ! – திருமாவளவன் நிலைப்பாடு ஏன் விமர்சிக்கப்படுகிறது ?

Byadmin

Aug 18, 2025


தூய்மைப் பணியாளர் போராட்டம்

சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ கட்சிகளோடு நேரில் சென்று வலியுறுத்தவும் செய்தார்.

இந்த நிலையில் தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பணி நிரந்தரம் கேட்பது மரபு சார்ந்த, அடிமை சார்ந்த சிந்தனை’ என்றும் சொல்லி, அந்த கோரிக்கையின் அடிப்படையையே விமர்சித்துள்ளார்.

போராடிய தொழிலாளர்கள், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இரவோடு இரவாக அகற்றப்பட்ட நிலையில், திருமாவளவனின் கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

By admin