• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம் | False image created against us in sanitation workers issue: TN Govt in High Court

Byadmin

Aug 12, 2025


சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வினோத், மீண்டும் இன்று இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.” என விளக்கமளித்தார்.

அப்போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தினந்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது எனவும் எச்சரித்தார்.

சர்ச்சையின் பின்னணி: சென்னை மாநக​ராட்​சி​யின், 5-வது மற்​றும் 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​கான ரூ. 276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனியாருக்கு வழங்​கியதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​கள் சென்னை மாநகராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 10 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்மை பணியாளர்களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்​கக்​கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.

முன்னதாக, சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மை பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், மாநக​ராட்சி நிர்​வாக​மும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டது நினைவுகூரத்தக்கது.



By admin