• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

தென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு; மாற்று போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

Byadmin

Feb 4, 2026


இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் இன்று (04) ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் ரயில் தடம் புரண்ட சம்பவம் காரணமாக பல ரயில் பாதைகளில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, தென்கிழக்கு இலண்டனின் செல்ஹர்ஸ்ட் பகுதியில் உள்ள ஒரு டிப்போவிற்குள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. அதேவேளை, இலண்டன் பிளாக்ஃப்ரியர்ஸ் மற்றும் நோர்வுட் சந்திப்பு இடையே சிக்னல் தொடர்பான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் விளைவாக இலண்டன் பிரிட்ஜ் மற்றும் ஈஸ்ட் கிரின்ஸ்டெட் இடையேயான ரயில் பாதை, ஆர்பிங்டன் – லூட்டன் வழித்தடம், பிரைட்டன் – கேம்பிரிட்ஜ் சேவை, மேலும் பெட்ஃபோர்ட் மற்றும் 03 பாலங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சேவைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளதுடன், பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்புதென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

By admin