• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

தென் கொரியாவில் எட்டு மணிநேரம் நடக்கும் மிக கடினமான தேர்வு – இளைஞர்களின் வாழ்வை மாற்றுவது எப்படி?

Byadmin

Nov 15, 2024


சுனேயுங் தேர்வு, தென் கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவில், ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது.

எட்டு மணி நேரம், ஐந்து பாடத்தேர்வுகள், நான்கு இடைவேளைகள், ஒரு நாள் மற்றும் ஒரு வாய்ப்பு. தென் கொரியாவின் இளைஞர்களின் வாழ்க்கையே மற்றும் ‘சுனங் தேர்வு’ இப்படிதான் இருக்கும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே தென்கொரியா மாணவர்கள், எந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பயிலுவார்கள் என்பது முடிவாகும். அவர்களின் வேலை, வருமானம் மற்றும் பிற உறவுகளில் கூட இதன் தாக்கம் இருக்கும்.

சுனங் தேர்வு என்பது தென்கொரியாவில் நடத்தப்படும் ஒரு திறனறிதல் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெற்றால்தான் மாணவர்களுக்கு அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்தத் தேர்வு, வருடத்திற்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டுமே நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்துவர்கள். இந்த ஆண்டு இந்த தேர்வு நவம்பர் 14-ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.

By admin