• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

தென் கொரியா விமான விபத்து: பறவை மோதினால் என்ன நடக்கும்? விமானிகள் எப்படி முடிவெடுப்பார்கள்?

Byadmin

Jan 1, 2025


விமானிகள் அவசர சூழல்களில் எப்படி முடிவெடுப்பார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘விமானிகள் பதட்டத்தில் முடிவெடுக்கக் கூடாது'(சித்தரிப்புப்படம்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

“வேகமாகவும் அதேசமயம் பதட்டம் இன்றியும் முடிவுகளை எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்கிறார், சென்னையை சேர்ந்த விமானி அன்பு.

அன்பு போன்ற விமானிகளால், பல சமயங்களில் மிகவும் பொறுமையாக அமர்ந்து முடிவு எடுக்க முடியாது. அவசர நேரங்களில் இவர்கள் எடுக்கும் துரிதமான முடிவுகள், நூற்றுக்கணக்கான மக்களின் உயிருடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அவர்கள் எடுக்கும் உடனடி முடிவுகள், புறச்சூழல் தரும் அழுத்தத்தாலோ, பதட்டத்தாலோ விளைந்ததாக இருக்கக் கூடாது. அனைத்தையும் யோசித்து விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் விமானிகள்.

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய விபத்துகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விமானிகளின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? அச்சமயங்களில் அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்.

By admin