• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

தென் கொரிய விமான விபத்து: ஓடுபாதைக்கு அருகில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?

Byadmin

Dec 31, 2024


ஜெஜு ஏர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன.

தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதைக்கு அருகே “அசாதாரணமான” கான்கிரீட் சுவரை குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன.

தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள், ஓடுபாதையின் எல்லையில் இருந்து 250 மீ (820 அடி) தொலைவில் கான்கிரீட் சுவர் உள்ள இடத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

விமான பாதுகாப்பு நிபுணர் டேவிட் லியர்மவுண்ட், “தடை” இல்லாதிருந்தால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அதில் இருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் தப்பித்திருக்கலாம். ஒருவேளை அனைவரும் கூட உயிர் பிழைத்திருப்பார்கள் என்று கூறினார்.

By admin