• Sat. Oct 18th, 2025

24×7 Live News

Apdin News

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு | hc order to no further action should be taken regarding govt order removing caste names from streets

Byadmin

Oct 18, 2025


மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

அதில், புதிய பெயரிடும் பணி​களை நவம்​பர் 19-ம் தேதிக்​குள் முடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த அரசாணையை அமல்​படுத்​து​வ​தில் பல்​வேறு நடை​முறைச் சிக்​கல்​கள் உள்​ளன. இதற்கு முன்பு 1978-ல் தெருக்​களில் உள்ள சாதி பெயர்​களை மாற்​று​வது தொடர்​பாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அந்த அரசாணை பின்​னர் அமல்​படுத்​தப்​பட​வில்​லை. தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளில் சாதிப் பெயர்​கள் இருப்​ப​தால் எந்த பிரச்​சினை​யும் ஏற்​பட​வில்​லை.

இது அந்த அரசாணை தேவையற்​றது என்​பதை காட்​டு​கிறது. அடுத்த ஆண்டு நடை​பெறும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில்​கொண்டு சாதிப் பெயர்​களை நீக்​கும் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், சாதிப் பெயர்​களை நீக்​கி​விட்டு சூட்ட வேண்​டியபெயர்​கள் பட்​டியலை பார்த்​தால், அரசின் உண்​மை​யான நோக்​கம் சாதி ஒழிப்பு இல்லை என்​பது தெரிய​வரும்.

தங்​கள் கட்​சியைச் சேர்ந்த, விருப்​ப​மானவர்​களின் பெயர்​களைச் சூட்​டும் நோக்​கத்​தில் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அரசாணை மக்​களிடையே பிளவை உண்​டாக்​கும் வகை​யில் உள்​ளது. மாதிரி பெயர்ப் பட்​டியலில் நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக போராடிய தேச பக்​தர்​களின் பெயர்​கள் இடம் பெற​வில்​லை. எனவே, தெருக்​களின் சாதிப் பெயர்​களை மாற்​றும் அரசாசணையை ரத்து செய்​தும், அது​வரை அரசாணையை செயல்​படுத்த தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், “தமிழக அரசின் இந்த திடீர் உத்​தர​வால் பெரும் குழப்​பம் ஏற்​படும். ஆதார் கார்​டு, வாக​னப் பதிவுச் சான்​று, பாஸ்​போர்ட் மற்​றும் பிற அடை​யாள அட்​டைகளில் பெயர் மாற்​றம் செய்​வ​தில் சிக்​கல் ஏற்படும். இதைக் கருத்​தில் கொண்​டு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்​டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்​பில் கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் அஜ்மல்​கான் வாதிடும்​போது கூறியது: இந்த மனு உள்​நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. டெல்​லி, உத்தர பிரதேசம் மாநிலங்​களில் தெருக்​களின் பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன. மாநிலத் தலைநகரங்​களின் பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.

அப்​போதெல்​லாம் வராத குழப்​பம், இப்​போது எப்​படி வந்​து​விடப் போகிறது. சாதிப் பாகு​பாடு இருக்​கக் கூடாது என அரசு கொள்கை ரீதி​யான முடி​வெடுத்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்வாறு வாதிட்டார்.

பின்​னர் நீதிப​தி​கள், சா​திப் பெயர்​களை நீக்​கு​வது குறித்து மாநில அரசு எடுத்​துள்ள நடவடிக்கை பாராட்​டத்​தக்​கது. அதே​நேரத்​தில், அதற்​காக என்ன வழி​முறை​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளது என்​பதை தெளிவுபடுத்​த​வில்​லை. எனவே, அதுகுறித்து பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும்.

அது​வரை சாதிப் பெயர்​களால் பிரச்​சினை ஏற்​படும் இடங்​கள் குறித்து ஆய்வு செய்​வது மற்​றும் சாதி பெயர்​களை மாற்​று​வது குறித்து மக்களிடம் கருத்​துக் கேட்​கலாம். ஆனால், அரசாணை தொடர்​பாக அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என உத்தர​விட்​டனர்.



By admin