0
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெரு நாய்களில் அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மீது தொடராக தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக புதுடில்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்களை பலர் அறைந்து, குத்தி, கற்களை எறிந்து தாக்கியுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது.
அண்மையில் புதுடில்லியில் தெரு நாய்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தச் சர்ச்சைக்குரிய உத்தரவை எதிர்த்து, விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்தி : டெல்லியில் தெரு நாய்களை அகற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்புகள்!
போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் அதன் உத்தரவில் சில மாற்றங்களைச் செய்திருந்தது. ஆனால், பலரிடையே தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற தவறான எண்ணம் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனால் நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தெரு நாய்களைச் சமாளிப்பதில் அவற்றுக்கு வழங்குபவர்கள் போடுவோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
வீதிகளில் அல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் அவற்றுக்கு உணவு போட நகராட்சி அதிகாரிகள் வசதி செய்துதர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.