• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

தெற்காசிய அரசியல் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கம்: வர்ணனையாளர்கள் மற்றும் சர்வதேச உறவியல் நிபுணர்களின் பார்வையில்

Byadmin

Jan 23, 2026


தெற்காசிய அரசியல் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2026 டி20 உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், வங்கதேச அணியின் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB – பிசிபி) தங்கள் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே இலங்கையில் நடத்த வேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஐசிசி கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ‘உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், போட்டிகள் இந்தியாவில் நடந்தால் அதில் பங்கேற்பதில்லை’ என்று வங்கதேசமும் உறுதியாகக் கூறிவிட்டது.

வங்கதேசத்தின் இந்த முடிவு தெற்காசிய புவிசார் அரசியல் சூழலால் கட்டுப்படுத்தப்பட்டதே என்ற கருத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சர்வதேச உறவியல் நிபுணர்களும் ஒருமித்துள்ளனர். மேலும், இந்த முழு நிகழ்வுகளின் தொடர்ச்சியே புவிசார் அரசியலுடன் நேரடியாக இணைந்ததே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதில்லை என்று வங்கதேசம் முடிவு செய்தால், அதன் ஐசிசி உறுப்பினர் அந்தஸ்தே இடைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

By admin