• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் 6 பதக்கங்கள், வக்சனக்கு வெள்ளி பதக்கம்

Byadmin

Oct 25, 2025


இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விக்னராஜ் வக்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

 

அப் போட்டியை 14 நிமிடங்கள், 23.21 செக்கன்களில் வக்சன் நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பசிந்து மல்ஷான் (16.19 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் மதுஷானி ஹேரத் புதிய சாதனையுடன் (13.26 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் அதே போட்டியில் சஷினி உபேஷ்கா (12.79 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் இலங்கை அணியினர் (3:20.25) வெள்ளிப் பதக்கத்தையும் பெண்களுக்கான குண்டு எறிதலில் ஓவினி சந்த்ரசேகர (13.03 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இதற்கு அமைய தெற்காசி மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 4ஆவது மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்த 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

By admin