• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

தெலங்கானா: கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய பெண் ரௌடி அங்குரிபாய் சிக்கியது எப்படி?

Byadmin

Jan 3, 2025


அங்குரிபாய், கஞ்சா கடத்தல், ஹைதராபாத்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, அங்குரிபாய்

  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பெண் ரௌடி ஒருவர் ஹைதராபாத் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். உள்ளூரில் ‘அங்குரிபாய்’ என பிரபலமாக அறியப்படும் அருணாபாய் என்பவர், ஹைதராபாத்தில் உள்ள தூல்பெட் என்ற இடத்தை தளமாகக் கொண்டு ஒரு சிறிய அளவிலான போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர் மீது 13 கஞ்சா வழக்குகள் இருப்பதாக தெலங்கானா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கைது குறித்த விவரங்களை காவல்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

“அங்குரிபாய் ஒரு காலத்தில் சாதாரண இல்லத்தரசியாக இருந்தார். வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது குடும்பம், ஹைதராபாத்தில் உள்ள தூல்பெட்டில் சாராய வியாபாரம் நடத்தி வந்தது. இந்தத் தொழிலை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால், இந்தக் குடும்பம் கஞ்சா கடத்தலில் ஈடுபடத் தொடங்கியது” என்று தெலங்கானா காவல்துறை சிறப்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“அங்குரிபாயும் இந்தத் தொழில் செய்யத் தொடங்கினார்” என்று இந்த சிறப்புப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

By admin