• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – சிக்கிகொண்ட 8 தொழிலாளர்கள்

Byadmin

Feb 22, 2025


தெலங்கானா: சுரங்கம் விபத்து

பட மூலாதாரம், Uttam Kumar Reddy @FB

படக்குறிப்பு, கோப்புப்படம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைத்துள்ளனர். 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.

கட்டுமானப் பணியின்போது திடீரென்று ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

8 தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக அம்ராபாத் மண்டல தாசில்தார் மாருதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

“எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளே சிக்கியவர்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை”, என்றும் அவர் கூறினார்.

By admin