தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுக்கு இந்த ஆண்டுமுதல் நினைவேந்தல் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நினைவெழுச்சி அகவம் அறிவித்துள்ளது.
கடந்த 5ம் திகதி மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பினைத் தொடர்ந்து இன்று ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரின் நினைவேந்தலை எழுச்சிகரமாக நடாத்துவதற்காக மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் புதிதாய் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் இந்த ஆண்டுமுதல் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடாத்தப்படுமெனவும் மாவீரர் பணிமனை தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.