• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

தேசிய கணித தினம்: மாணவர்களுக்கு கணித பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?

Byadmin

Dec 23, 2024


தேசிய கணித தினம், கணித பயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரிப் படம்

இன்று தேசிய கணித தினம் (டிசம்பர் 22). ‘கணிதம்’- பள்ளி முதல் கல்லூரி வரை, இந்த ஒரு பாடத்தின் தேர்வுக்கும் அதன் மதிப்பெண்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஒரு தனித்துவமான கவனம் கொடுக்கப்படுகிறது.

அதுவும், பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான பிறகு, மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு என்று கேட்டுவிட்டு, பலரும் கேட்கும் அடுத்த கேள்வி ‘கணிதத்தில் எத்தனை மதிப்பெண்கள்?’.

இன்னும் சொல்லப்போனால், பள்ளிக்கூடங்களில் ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அளவுகோலாக சிலரால் கணிதப் பாடம் பார்க்கப்படுகிறது. பள்ளியில் கற்பது மட்டுமின்றி, கணித பாடத்திற்கான ‘டியூஷன்’ வகுப்புகளுக்கும் செல்வது என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.

இதனால் கணிதம் என்றவுடன் அதை நினைத்து சில மாணவர்களுக்கு ஒரு பதற்றம் வரும், குறிப்பாக கணித தேர்வுக்கு முந்தைய நாள் முதல் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை.

By admin