2
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்கள் தேசிய நேருக்கடியாக மாறி வருவதாக பிரதமர் கியர் ஸ்டாமர் கூறினார்.
இங்கிலாந்து, ஷெஃபீல்டு பகுதி உயர்நிலை பாடசாலையில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள 15 சிறுவனை எண்ணி வருந்துவதாகவும் பிரதமர் கூறினார்.
ஷெஃபீல்டு பகுதியில் உள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையாகக் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக நகர பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தில் மற்றொரு 15 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
சம்பவம் குறித்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பம், பாடசாலையைச் சேர்ந்தோருடன் நாட்டு மக்களும் சிறுவனின் மரணத்தை எண்ணி வருந்துவதாகப் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறினார்.
மேலும் அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்கள் தேசிய நேருக்கடியாகி உள்ளன என்று அவர் கூறினார்.
இதேவேளை, இங்கிலாந்தில் கத்திக்குத்துச் சம்பவங்களைத் தடுக்கக் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான சட்டங்கள் நடப்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.