• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மேயர் வேட்பாளர் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது! – சுமந்திரன் விளக்கம்

Byadmin

May 3, 2025


“தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தாலே வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம்.” – என்றார்.

By admin