• Tue. Feb 10th, 2026

24×7 Live News

Apdin News

தேசிய மட்ட காற்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி தகுதி

Byadmin

Feb 10, 2026


14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய மட்ட காற்பந்தாட்ட சமேபோஷா கிண்ண இறுதிப் போட்டிக்கு யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி தகுதிபெற்றுள்ளது.

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளம் அகில இலங்கை ரீதியில் நடத்திய (U-14) வயதிற்குட்பட்டவர்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சமபோஷா கிண்ணத்துக்கான போட்டிகள் காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மைதானங்களில் இம் மாதம் 6 ,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற குழுப் குழுப் போட்டிகளில் ( Leaque) சம்பியனான யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் பதுளை அல் அதான் கல்லூரியை 03:02 என்ற கோல் கணக்கிலும்  காலிறுதியாட்டத்தில் நீர்கொழும்பு அல்ஹிலால் சர்வதேச பாடசாலையை 4:02 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதியாட்டத்தில் கொழும்பு Gateway சர்வதேச பாடசாலையை 02:01 என்ற கோல்கணக்கிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் (11/02/2026) புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கொழும்பு ஷாகிராக் கல்லூரியை யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin