• Tue. Jun 10th, 2025

24×7 Live News

Apdin News

தேனிலவில் மாயமான புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு – 7 நாட்களுக்குப் பின் சரணடைந்த மனைவி கைது

Byadmin

Jun 10, 2025


ராஜா ரகுவன்ஷியும் சோனமும் .

பட மூலாதாரம், Sameer Khan/BBC Hindi

படக்குறிப்பு, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர், மே 20 அன்று வீட்டை விட்டு மேகாலயாவுக்குச் சென்ற அவர்கள், மே 23 அன்று காணாமல் போனார்கள்.

இந்தூரில் உள்ள சகார் நகரில் வசிக்கும் 29 வயதான ராஜா ரகுவன்ஷி மற்றும் 27 வயதான சோனம் தம்பதியினர், தங்கள் தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தனர்.

ஆனால் மே 23 அன்று அவர்கள் காணாமல் போனார்கள்.

11 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 ஆம் தேதி, கிழக்கு காசி மலைகளில் உள்ள வெய்சாடோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள 150 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது, ஆனால் சோனமை காணவில்லை.

ஜூன் 4ம் தேதி, புதன்கிழமையன்று மாலை ராஜா ரகுவன்ஷியின் உடல் மேகாலயாவில் இருந்து அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

By admin