
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகளில் இருவரை தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேலும் 2 பேரை காவல்துறை பிடித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று (26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.


