• Thu. May 29th, 2025

24×7 Live News

Apdin News

தேமுதிக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு | Premalatha Vijayakanth announced of DMDK Assembly Election Officers

Byadmin

May 26, 2025


சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக கிறிஸ்டோபர் ஜெயக்குமார், கொளத்தூர்- கோவிந்தராஜ், திருவிக நகர்- அம்சா நந்தினி, திருவொற்றியூர்-ஆரோக்கிய ராஜ், ஆர்.கே.நகர்- கண்ணன், ராயபுரம்- அம்சா, மதுரவாயல்- சிவக்குமார், அம்பத்தூர் – நாகூர் மீரான், விருகம்பாக்கம் – மாரி, வேளச்சேரி – கலா, சோளிங்கநல்லூர் – ஜெய்சங்கர், ஆலந்தூர்- செல்வஜோதிலிங்கம், எழும்பூர்- பிரபு, துறைமுகம்- அருண், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- செல்வக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த பாக்கிய செல்வராஜை, அந்த பதவியில் இருந்து விடுவித்துவிட்டு அந்த பொறுப்புக்கு முத்துக்காளையை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.



By admin