• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தும் உத்தரவு நீடிப்பு! – நாளை வரை தடை தொடரும் எனக் கட்டளை

Byadmin

Apr 3, 2025


அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் நாளை வியாழக்கிழமை வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நேற்று முதல் இன்று வரை நடைமுறையில் இருக்கத்தக்கதாக நேற்று இத்தகைய உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதனை நாளை வரை நீடித்து இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசை கே.பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது நாளை வரை அமுலில் இருக்கும்.

இதேசமயம் ஒருவரின் பிறப்பின்போது வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மூலப் பிறப்புச் சான்றிதழை ஆதாரமாக – ஆவணமாக – ஏற்க மறுத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும்படியும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு இன்று உத்தரவிட்டது.

தென்னிலங்கையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு ஒன்று தொடர்பிலேயே இந்த வழிகாட்டலை நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது.

The post தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தும் உத்தரவு நீடிப்பு! – நாளை வரை தடை தொடரும் எனக் கட்டளை appeared first on Vanakkam London.

By admin