• Tue. Mar 25th, 2025

24×7 Live News

Apdin News

தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது இளைஞன் பலி; 16 வயது பெண்ணின் நிலை கவலைக்கிடம்!

Byadmin

Mar 23, 2025


இந்தியா – கர்நாடக மாநிலம், பெங்களூர் நகர் ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவில் இழுக்கப்பட்ட தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது இளைஞன் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 16 வயது பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இருவர் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் பெங்களூர் நகர் பொலிஸார் தெரிவித்தனர்.

100 அடி உயரமுடைய குறித்த தேரை பக்தர்கள் இழுக்கும்போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் திருவிழா நடைபெறுகிறது. அதைப்போல் இவ்வாண்டும் 2 தேர்கள் இழுக்கப்பட்டன. ஒரு தேர் சிக்கா நாகமங்கலா எனும் பகுதியில் விழுந்தது. அதனால் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.

தேரை இழுத்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிர் தப்பினர்.

இரண்டாவது தேர் கனத்த மழையினாலும் பலத்த காற்றினாலும் ராயசண்டரா எனும் பகுதியில் சாய்ந்தது.

100 ஆண்டு வரலாற்றில் இது முதல்முறையாக நடந்ததாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

By admin