0
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகையான தேவயானி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நிழற்குடை’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிழற்குடை’ எனும் திரைப்படத்தில் தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, அஹானா, தர்ஷன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். தாய்மையை பற்றியும், ஆசிரியை பற்றியும் பேசும் இந்த திரைப்படத்தை தர்ஷன் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி சிவா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே பாக்யராஜ்- பேரரசு -ஆர். கே. செல்வமணி- சுரேஷ் காமாட்சி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி நடிகை தேவயானி பேசுகையில், ” நிழற்குடை அழகான கருத்துள்ள படம். இன்றைய இளம் பெற்றோர்களுக்கு தேவையான விடயம் இப்படத்தில் உள்ளது” என்றார்.