• Mon. Jan 27th, 2025

24×7 Live News

Apdin News

தேவரியம்பாக்கம் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு: 900 ஆண்டுகால பழமையானது என ஆய்வாளர்கள் தகவல் | Discovery of Buddha statue in Devariyambakkam village

Byadmin

Jan 26, 2025


காஞ்சிபுரம்: தேவரி​யம்​பாக்கம் கிராமத்​தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. பெரு​மாள் கோயி​லில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமை​யானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரி​வித்​துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள தேவரி​யம்​பாக்​கத்​தில் வெண்மை நிற பளிங்​குக் கல்லால் ஆன அமர்ந்த நிலை​யில் உள்ள புத்​தரின் சிலை பெரு​மாள் கோயி​லில் பழைய பொருட்கள் ஓரம் கட்டி வைக்​கப்​பட்ட இடத்​தில் இருந்​தது.

இந்தச் சிலை​யில் உள்ள புத்​தரின் கண்கள் மூடிய நிலை​யில்தியானத்​தில் உள்ளவாறு அமைக்​கப்​பட்​டிருந்தன.ஓரடி உயரமுள்ள இச்சிலை​யில் காதுகள் இரண்​டும்தோள்வரை நீண்​டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலை​யிலும் சுருள் சுருளான தலைமுடி​யுட​னும், இடப்புறத் தோள்​பட்டை முதல் இடுப்பு வரை ஆடையுட​னும், பின்புற மேலாடை நேர்த்தி​யாகத் தெரி​யும் வகையிலும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

உலக அமைதிக்காக.. கிமு 3-ம் நூற்​றாண்​டில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்​கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்​தரின் வழியை பின்​பற்றினார். உலகெங்​கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்​றார்.

அதுபோன்ற இடங்​களில் அமைக்​கப்​படும் சிலையை போல் இந்தச் சிலை இருப்​பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்​தது. காலம் கி.பி 11-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்​ததாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்​லியல் துறை உதவி தொல்​லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்​டாய்​வாளர்கள் நாகராஜன், பிரசன்னா ஆகியோ​ரும் உறுதி செய்​தனர்.

புத்தர் சிலை கிடைக்​கப்​பெற்ற தேவரி​யம்​பாக்கம் பெரு​மாள் கோயில் 100 ஆண்டு​களுக்கு முன் ஓலைக் குடிசையாக இருந்​த​தாக​வும், அதில் சீனிவாச பெரு​மாள் புகைப்​படத்​துடன் இச்சிலையை வைத்து சிலர் வணங்கி வந்​த​தாக​வும் ​முன்னோர் சொல்​லியதாக இந்த கோ​யில் அருகே வசித்து வரும் பொது​மக்​கள் தெரிவிக்​கின்​றனர்​.



By admin