• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

தே.மு.தி.கவுக்கு சீட் மறுத்த அ.தி.மு.க – 2026 கணக்கு என்ன?

Byadmin

Jun 1, 2025


அதிமுக, தேமுதிக, ராஜ்யசபா தேர்தல், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த்

பட மூலாதாரம், X/AIADMK

படக்குறிப்பு, அதிமுக – தேமுக

‘தே.மு.தி.கவுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும்’ என அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

‘எல்லா கட்சிகளும் தேர்தலை நோக்கியே அரசியல் செய்கின்றன. எங்கள் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்’ எனக் கூறுகிறார், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடத்தை அ.தி.மு.க ஒதுக்காதது ஏன்? பின்னணியில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் ஜூன் 19 அன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.கவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், எம்.எம்.அப்துல்லா, சண்முகம் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதம் நிறைவடைய உள்ளது.

அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவைக்கு தேர்வான அன்புமணி ராமதாஸ், சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.கவுக்கு உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

By admin