தைப்பூசம் திருநாளில் முருகனை வழிபடுவது சிறப்பு. தை 29-ம் தேதி பூச நட்சத்திரம், பௌர்ணமி சேரும். விரதம் இருந்து, முருகனை தரிசித்து, வேலினையும் வணங்குவது நன்மை தரும்.
அகிலம் தோன்றிய நாளே தைப்பூசம் திருநாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு தை மாதம் தெய்வீக மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒன்றுகூடி வருகின்றன.
அன்றைய தினமே தைப்பூசமாகவும் கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் சிறப்பான நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் முருகன் என்பது நம்பிக்கை. தை மாதம் 29-ம் தேதி பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 29-ம் தேதி காலையில் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
The post தைப்பூசம் திருநாளின் சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்! appeared first on Vanakkam London.