கல்கிஸை, படோவிட்ட மாரிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாரிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இயற்கையைத் தெய்வமாக வழிபடும் வாழ்வியலை உலக்கு எடுத்தியம்பிய மகத்தான பண்டிகையான தைப்பொங்கல் விழாவில், சகோதர தமிழ் மக்களோடு இணைந்து அதனைக் கொண்டாடக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.