• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுக! – Vanakkam London

Byadmin

Feb 12, 2025


யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை  புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது.

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில்,

இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை  இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

By admin