• Sun. Feb 1st, 2026

24×7 Live News

Apdin News

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

Byadmin

Feb 1, 2026


யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு  ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள்  முன்னெடுக்கப்பட்டது.

போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin