4
அடுத்தவர் காணியில்
அத்துமீறி நுழைந்து
வீடு கட்டுவது
இது சரியா இல்லை பிழையா?
அடுத்து!
வீட்டுக்காரரின் அனுமதி இல்லாமல்
தையிட்டி விகாரை அமைத்தது
இது சரியா இல்லை பிழையா?
கட்டின ஒரு விகாரையை
இடிப்பது
தவறு என்கிறார் அர்ச்சுனா
இது சரியா இல்லை பிழையா?
முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த
தம்புள்ள காளி கோயிலை
அரசு இடித்து அழித்தது
இது சரியா இல்லை பிழையா?
குருந்தூர் மலையில்
விகாரை கட்டக் கூடாது என்று
தீர்ப்பு வளங்கிய பிறகும்
விகாரை கட்டப்பட்டது
இது சரியா இல்லை பிழையா?
இப்போது இரணைமடுவில்
புதிதாக ஒரு விகாரை
கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இது சரியா இல்லை பிழையா?
வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்