• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் சிஎஸ்கேவுக்கு தோனி ஏன் முக்கியம்?

Byadmin

Apr 22, 2025


சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், சாரதா உக்ரா
  • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக

கடந்த வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிற செய்தி வெளியானபோது சமூக ஊடகங்களில் தோனி மீண்டும் வைரல் ஆனார். கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

தோனி மீண்டும் கேப்டன் ஆனது சிஎஸ்கேவுக்குத் தேவைப்பட்ட புத்துணர்ச்சியை வழங்கும் எனப் பரவலாக நம்பப்பட்டது.

ஆனால் சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் தற்போது வரை மிகவும் கடினமானதாகவே இருந்துள்ளது.

ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே அணி களம் கண்டது.

By admin