• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் | tvk leader remembered Mullivaikkal Memorial Day

Byadmin

May 18, 2025


சென்னை: உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும்!” எனப் பதிவிட்டுள்ளார்.



By admin