7
இங்கிலாந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ரேடார் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு நேர்ந்ததால், 4 மணித்தியாளங்களுக்கு மேல் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஹீத்ரோ உட்படப் பல விமான நிலையங்கள் முடங்கின.
எனினும், கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் NATS எனும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவை நிறுவனம் கூறியது.
நேற்றுப் புதன்கிழமை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான விமானங்கள் அவசர நிலையில் தரையிறக்கப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளிடமும் NATS மன்னிப்புக் கேட்டது.
4 மணித்தியாளங்களுக்குப் பின் விமான சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பின.
ஆனால், அயர்லந்தின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ரயன்ஏர், NATS நிறுவனத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது. NATSஇன் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது.
இதற்கு முன் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவ்வாறு NATSஇன் கட்டமைப்பில் கோளாறு நேர்ந்து விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு இழப்பீடாக 100 மில்லியன் பவுண்ட் வழங்க வேண்டியிருந்தது.