தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலாப் பயணி
பிரேசிலில் உள்ள கொபகபானா கடற்கரைக்கு பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நண்பர்களுடன் மணலில் குழி தோண்டிய பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஜென்சன் ஸ்டர்ஜென் தான் தோண்டிய குழியிலே சிக்கிக் கொண்டார்.
சுமார் மூன்று மணி நேரம் சிக்கியிருந்தவருக்கு வழிப்போக்கர்கள் மற்றும் மீட்பு வீரர்கள் இணைந்து அவருக்கு பியர் கொடுத்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அவர் குழிக்குள் குதித்தபோது மணல் சரிந்ததாகத் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக அலைகள் வரும் முன்பே அவர் மீட்கப்பட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு