• Thu. Jun 12th, 2025

24×7 Live News

Apdin News

தோனி: ஐசிசி ஹால் ஆஃப் பேம் என்பது என்ன? ஒரே ஆண்டில் 7 பேரின் பெயர்கள் சேர்ப்பு

Byadmin

Jun 11, 2025


ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்” என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019)

ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது.

By admin