• Wed. Dec 24th, 2025

24×7 Live News

Apdin News

தோனி போல் அலெக்ஸ் கேரி விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுவது எப்படி? இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும்

Byadmin

Dec 24, 2025


அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம், Getty Images

“அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை”

பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது.

பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம்.

By admin