• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

த.வெ.க. விஜய் முதல்வராக பதவி ஏற்க மீண்டும் தயாராகும் நேரு ஸ்டேடியம்..!

Byadmin

May 8, 2026


தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, அதிக இடங்கள் பிடித்த தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 எண்ணிக்கை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆதரவு அளித்தது.

இதனால் கடந்த 5-ந்தேதி 113 ஆதரவுடன் ஆளுநரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து 7-ந்தேதி பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு கான்வாய் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றது. ஆனால், ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுக்கவில்லை. 118 எண்ணிக்கையை கேட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஏற்பாடு நிறுத்தப்பட்டது. கான்வாய் திரும்பி சென்றது.

தற்போது விசிக, இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவை த.வெ.க. வெற்றுள்ளது. இதனால் 120 பலத்தை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆளுநரை 3-வது முறையாக இன்று மாலை 6.30 மணியளில் சந்தித்து பேசி வருகிறார். விஜய் முதல்வராவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதல்வராக பதவி ஏற்பதற்கான வேலை மீண்டும் தொடங்கியுள்ளது.

By admin