• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட 5 நோய்களை அறிவது எப்படி?

Byadmin

Aug 25, 2025


நகங்கள், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நகங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல முக்கியமான தகவல்களைத் தருகின்றன

கைகளின் அழகை மேம்படுத்தும் நகங்கள் உண்மையில் உடலின் ‘இறந்த செல்கள்’, அதாவது, உயிர் இல்லாத செல்கள் ஆகும். ஆனால் இந்த உயிரற்ற நகங்கள் உங்களால் உணரமுடியாத உங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லும்.

நகங்களைப் பார்த்தே, ஒருவரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பலவற்றுடன் தொடர்புடைய பல்வேறு நோய்களைக் கண்டறிய முடியும் என்று கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவ்யூவின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.

கர்நாடக மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 272 நோயாளிகளிடம் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவ்யூ மேற்கொண்ட இந்த ஆய்வில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

By admin