0
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிரபலமானாலும் ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பல்ஸ் ‘எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பல்ஸ்’ எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ரிஷிகா ராஜ்வீர், ஆர். வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், ‘கும்கி’ அஸ்வின், கூல் சுரேஷ், கே பி வை சேது, கே பி வை சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் அபிஷேக் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குளோபல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அழகர் ராஜ் ஜெயபாலன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” அரசாங்க வைத்திய சாலைகளின் பின்னணியில் இன்றும் நிலவும் குறிப்பிடத்தக்க சமூக பிரச்சனையை முன்வைத்து திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான மாஸ்டர் மகேந்திரன் தீவிரமான தோற்றத்தில்.. கையில் ஒரு எலியை வைத்துக்கொண்டு தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.