தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்புத் திறனை கொண்ட பிரபல நடிகர்களான தினேஷ் – கலையரசன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ தண்டக்காரண்யம்’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ எனும் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டக்காரன்யம்’ இதில் தினேஷ், கலையரசன், அருள்தாஸ் , முத்துக்குமார், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் வழங்குகிறார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம்பெறும் காட்சிகள் உணர்வுபூர்வமாகவும், உறவுகள் தொடர்பானதாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை விவரிப்பதாகவும் இருப்பதால் இரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post நடிகர்கள் தினேஷ் – கலையரசன் இணைந்து மிரட்டும் ‘தண்டகாரண்யம் ‘ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.