0
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனியின் உறவினரும், ‘மார்கன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அஜய் திஷான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘பூக்கி ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகும் ‘பூக்கி ‘எனும் திரைப்படத்தில் அஜய் திஷான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தனுஷா நடிக்கிறார்.
இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா , பிளாக் பாண்டி , ஆதித்யா கதிர், பிக் பொஸ் சத்யா , ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ ராதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் அண்டனி இசையமைக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன் – ரத்னகுமார் – ராம் மகேந்திரா , ஒளிப்பதிவாளர் சக்திவேல் , நடிகர் ருத்ரா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.