• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் அஜித் விலகி போனாலும் விடாத ரசிகர்கள் – அப்படி அவர் என்ன செய்தார்?

Byadmin

Apr 20, 2025


அஜித் குமார், தமிழ் நடிகர், கோலிவுட், சினிமா

பட மூலாதாரம், Ajithkumar/x

தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது. ரசிகர்கள் சந்திப்பை அஜித் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிவித்தபோதெல்லாம் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை.

அப்படி என்ன செய்துவிட்டார் அஜித்?

அஜித் திரைத்துறைக்குள் வந்ததே ஒரு விபத்துதான். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வந்த அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட, மறுபக்கம் திரைத்துறைக்கான கதவும் திறந்தது.

By admin