• Sun. Jan 18th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘கட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

Byadmin

Jan 18, 2026


பான் இந்திய நடிகரான அண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ், கபீர் துஹான் சிங், சுனில், ஜெகதீஷ், துஷாரா விஜயன், பார்த் திவாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் .

ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் மே மாதம் 14- ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சி மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக் குழுவினர் பங்கு பற்றிய இந்நிகழ்வில் ‘காட்டாளன் ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதில் இடம் பிடித்திருக்கும் எக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு வியப்பை அளித்து வருவதால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

The post நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘கட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin