0
மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரான அண்டனி வர்கீஸ் கதையின் நாயகனாக வித்தியாசமான அவதாரத்தில் நடித்திருக்கும் ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தின் பான் இந்திய அளவிலான வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ், கபீர் துஹான் சிங், சுனில், ஜெகதீஷ் , துஷாரா விஜயன், பார்த் திவாரி , அன்சன் பால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரணதேவ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி .அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஆண்டுதோறும் ஏதேனும் பான் இந்திய அளவில் கோடி கணக்கான வசூலை குவிக்கும் ‘லோகா’ போன்ற மலையாள திரைப்படங்களில் ‘காட்டாளனும்’ ஒரு படைப்பாக இருக்கக்கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.