0
நடிகர்கள் அருண்பாண்டியன்- நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரைட் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா முரளி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைட்’ எனும் திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் ,அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி, தங்கதுரை, ஆதித்யா, யுவினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். பத்மேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன் மற்றும் தி. ஷியாமளா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு அற்புதமான க்ரைம் திரில்லர் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.