• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் அபிநய் காலமானார் – Vanakkam London

Byadmin

Nov 10, 2025


அண்மைய காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய்  தனது 44 வயதில் திங்கட்கிழமை (11) காலமானார்.

இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்.

அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார்.

அண்மைய காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபிநய்க்கு கேபிஒய் பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்து செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நடிகர் அபிநய் உயிரிழந்துள்ளார்.  இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin