• Fri. Mar 13th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Byadmin

Mar 13, 2026


மலையாள நடிகர் அர்ஜுன் பிரபாகரன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘பேட்டில்’ திரைப்படத்தின் ‘காச்சன் மூச்சன்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி. நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் அர்ஜுன் பிரபாகரன்,  ஆராத்யா, முனிஸ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா , சுருளி,  காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீவா மற்றும் ராஜ் கே. சோழன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இணைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எலைட் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதில் இடம்பெற்ற ‘கச்சா மூச்சா ஏண்டா மச்சான் பீலிங்கா இருக்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் ராஜ் கே. சோழன் மற்றும் ராவணா ராம் ஆகிய இணைந்து எழுத பின்னணி பாடகர் கானா அபீலோ பாடியிருக்கிறார். வடசென்னை மக்களின் ஃபேவரைட் இசை வடிவம் கானா & றாப் இசையும் கலந்து உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை உற்சாகத்துடன் துள்ளலாக நடனம் ஆட வைக்கிறது.

The post நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin