• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் ஆதி நடிக்கும் ‘ சப்தம் ‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Byadmin

Feb 25, 2025


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சப்தம் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ கிரான்ட் மா ‘ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரபல இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சப்தம்’ எனும் திரைப்படத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன் ,லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம். எஸ். பாஸ்கர் , ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாழடைஞ்ச கிணத்தோரம்..’  எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். அமானுஷ்ய சம்பவங்களையும், அது தொடர்பான மக்களின் கருத்துகளையும் மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த பாடல் வைக்கம் விஜயலட்சுமியின் மாயஜால குரலில் அமானுஷ்ய அனுபவத்தை ஒலி வழியாக உணர வைப்பதால் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

The post நடிகர் ஆதி நடிக்கும் ‘ சப்தம் ‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin