0
அறிமுக நடிகர்கள் ஜானகி, ஆகாஷ், ஹரி கிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டெப்போ’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாய பிம்பம்’ எனும் திரைப்படத்தில் ஜானகி, ஆகாஷ் ,ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சஹாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நந்தா இசையமைத்திருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு முந்தைய காலகட்ட இளைஞர்களின் பாலியல் வேட்கையை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்குள்ளே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘என் டெப்போவுக்குள்ள நுழையாத பஸ்ஸே இல்ல.. என் லிப்பு ரெண்டும் பார்க்காத கிஸ்ஸேயில்ல..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகர் எம். எல். ஆர். கார்த்திகேயன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அந்த காலகட்டத்திய துள்ளல் இசை பாணியில் அமைந்திருப்பதாலும் பாடல் வரிகள் இளமை ததும்ப இருப்பதாலும் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.