0
மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உருட்டு உருட்டு’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘கோங்குரா ஏங்குறா’ என்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் ‘உருட்டு உருட்டு’ எனும் திரைப்படத்தில் கஜேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா சிங், ஜெய்சங்கர், மிப்பு சாமி, சேரன் ராஜ் , பாவா லட்சுமணன், ஹேமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ். என். அருணகிரி இசையமைத்திருக்கும் இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை ஜாய் ஸ்டுடியோ கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோங்குரா ஏங்குறா கொஞ்சுற பாவா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கர் சுப்பிரமணியன் எழுத ,பின்னணி பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பாடியிருக்கிறார். துள்ளலிசை பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒலிக்கும் இந்த பாடலும், பாடலுக்கான வரிகளும் இளமையை கொண்டாடுவதால்.. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக மாற்றம் பெற்றிருக்கிறது.